1 copy

காவேரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் மாநகர காவல்துறை அலுவலகத்தில் hands-free sanitizer காவல்துறையினர் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டது.

காவேரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் hands-free sanitizer கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் அவர்களிடம் காவேரி குரூப் ஆப் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் வழங்கினார்.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களால் முயன்ற சேவையை செய்துவருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள காவேரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் மக்கள் பணிக்காக தினம்தோறும் சேவையாற்றி வருகிறது. அதன் ஒருபகுதியாக காவல்துறையினர் பாதுகாப்பிற்காக 150 hands-free sanitizer ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக இன்று கோவை மாநகர காவல்துறை அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் தீபக் தாமோர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் கூறுகையில், காவேரி குரூப் கம்பெனி சார்பில் தமிழக முதல்வருக்கு ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை மாநகராட்சி ஆணையரிடம் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. தொடர்ந்து 100 பேருக்கு ஒரு மாதமாக உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காப்பீட்டு திட்டம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைைத்து காவல் நிலையத்திற்கும் 150 hands-free சனிடைசர் ரூபாய் இரண்டு லட்சத்து பத்தாயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஹோம் பார்க் கிரேட்டிவ் ஹவுசஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் ஏ.ஆர் கிருஷ்ணகுமார், உதவி ஆணையர்கள் முருகவேல், பிரேம்ஆனந்த், சிற்றரசு மற்றும் காவேரி குரூப் கம்பெனி நிர்வாகிகள் பங்கேற்றனர்.